தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு


UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM

ADDED : ஜூன் 14, 2025 11:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM ADDED : ஜூன் 14, 2025 11:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
2025-26ம் கல்வி ஆண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு உள்ளது.

இந்த நாட்காட்டியில் நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு நாட்கள், வேலைநாட்கள், விடுமுறை நாட்கள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெற்று உள்ளன. அதன்படி இந்த கல்வியாண்டில் மொத்தம் 210 நாட்கள் வேலைநாட்களாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆண்டு முழுவதும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வானது செப்டம்பர் 18ம் தேதி முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன் பின்னர் செப்டம்பர் 29ம் தேதி காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. இந்த விடுமுறை அக்டோபர் 5ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறைகளும் அடங்கும்.

டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும். டிசம்பர் 24ம் தேதி முதல் 2026ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறையாகும்.

தேர்வுக்காலங்கள், அதனுடன் இணைந்த விடுமுறைக்காலங்களை தவிர்த்து, பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களும் நாட்காட்டியில் இடம்பெற்றுள்ளது. பொங்கல் விடுமுறை 2026 ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்புக் கல்வியாண்டில் முக்கியமான முழு ஆண்டு தேர்வு 2026 ஏப்ரல் 10ம் தேதி தொடங்குகிறது. அதே ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஆகும். ஏப்ரல் 25ம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான கோடை விடுமுறை காலம் தொடங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us