UPDATED : ஜூன் 27, 2025 12:00 AM
ADDED : ஜூன் 27, 2025 07:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்யக்கோரி, தொகுப்பூதிய நர்ஸ்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், 24 மணி நேர தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.
இதுகுறித்து, அச்சங்கத்தினர் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் 12,500 என, 40 சதவீதம் நர்ஸ்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் போராடியபோது ஆதரவு தெரிவித்த தி.மு.க., தலைமை, ஆளுங்கட்சியாக மாறிய பின் கண்டுகொள்ளவில்லை.
தேர்தலின்போது, எங்களை பணி நிரந்தரம் செய்வதாக, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.