UPDATED : ஆக 11, 2025 12:00 AM
ADDED : ஆக 11, 2025 08:47 AM
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வராக பணியாற்றிய முருகேசன், கடந்த பிப்., மாதம் ஓய்வு பெற்றார். மூத்த மருத்துவர் பத்மினி கூடுதல் பொறுப்பாக கல்லுாரி முதல்வர் பணிகளை கவனித்து வந்தார்.
கோவை அரசு மருத்துவ கல்லுாரியில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்துறை பேராசிரியராகப் பணியாற்றிய மனோன்மணி, பதவி உயர்வு பெற்று திருப்பூர் மருத்துவ கல்லுாரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டார். அவர் இங்கு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மனோன்மணி கூறுகையில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தொடர்ந்து தரமான சிகிச்சைகள் அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு தரமான கல்வி, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் முழுமையாக வழங்கப்படும் என்றார்.

