புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து
UPDATED : ஆக 11, 2025 12:00 AM
ADDED : ஆக 11, 2025 08:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று நள்ளிரவில் HDU (உயர் சார்பு பிரிவு) 20 படுக்கை வசதியுள்ள வார்டு செயல்பட்டு வந்தது.
கடந்த இரண்டு நாட்களாக நோயாளிகள் யாரும் இங்கு அட்மிட் ஆகவில்லை. இந்நிலையில் அங்குள்ள ஒரு இயந்திரம் மட்டும் ஊழியர்களால் ஆன் செய்யப்பட்ட நிலையிலேயே கவனக்குறைவாக விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஒரு வெண்டிலேட்டர் தீ பற்றி எரிந்து வார்டு பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

