பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி கட்டுரை போட்டி: பங்கேற்க அழைப்பு
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி கட்டுரை போட்டி: பங்கேற்க அழைப்பு
UPDATED : ஆக 11, 2025 12:00 AM
ADDED : ஆக 11, 2025 08:55 AM
கரூர்:
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன் வெளியிட்ட அறிக்கை:
கரூர், வீரராக்கியம் சுவாதி மஹால், பா.ஜ., கிருஷ்ணராயபுரம் தொகுதி சார்பில், பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு செப்., 21ல் முப்பெரும் விழா நடக்கிறது. இதையொட்டி கட்டுரை போட்டி நடக்கிறது. இதில், உலக தலைவர் மோடி, நான் வியந்த தலைவர் மோடி, மகாகவி பாரதியும் தேசிய சிந்தனைகளும், சுதந்திர காற்றை சுவாசிக்க புரட்சி செய்த மகாகவி பார-தியும், வல்லரசு இந்தியாவிவை செதுக்கும் மோடியும், சுதந்திர இந்தியாவிற்கான சமத்துவ தலைவர் இம்மானுவேல் சேகரன், தென்தமிழகத்தின் புரட்சி நாயகர் இம்மானுவேல் சேகரன் ஆகிய தலைப்புகளில் நடக்கிறது.
போட்டியில் கலந்துகொள்பவர்கள், கிருஷ்ணரா-யபுரம் தொகுதிக்குள் வசிக்க வேண்டும். கட்டுரைகள், 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கட்டுரைகளை ஆக., 16 முதல் செப்., 1க்குள், help.kaveriamr@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு கட்டுரை அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டியில், 14 வயதுக்குட்பட்ட போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு, முதல் பரிசு, 10 கிராம் வெள்ளி நாணயம், இரண்டாம் பரிசு, 5 கிராம் வெள்ளி நாணயம், ஆறுதல் பரிசு, 2 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும். வயது, 15 முதல், 21 வரை முதல்பரிசு, 20 கிராம் வெள்ளி நாணயம், இரண்டாம் பரிசு, 10 கிராம் வெள்ளி நாணயம், ஆறுதல் பரிசு 2 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.