UPDATED : அக் 07, 2025 08:41 AM
ADDED : அக் 07, 2025 08:43 AM
பெங்களூரு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கர்நாடகா பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணம் பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. தற்போது, விடைத்தாள்கள் திருத்தும் பணி, பிற நிர்வாக செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் தேர்வு கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
எனவே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக 676 ரூபாயாக இருந்த தேர்வுக் கட்டணம், 710 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 5 சதவீதம். கட்டண உயர்வு, தேர்வில் தோல்வி அடைந்து மறு தேர்வு எழுதுபவர்களுக்கும் பொருந்தும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த முடிவால் பல ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடும் என, அச்சம் தெரிவித்துள்ளனர்.