தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் இடைநின்ற மாணவரை கண்டறிய குழு

பள்ளிகளில் இடைநின்ற மாணவரை கண்டறிய குழு

பள்ளிகளில் இடைநின்ற மாணவரை கண்டறிய குழு


UPDATED : நவ 01, 2025 07:09 AM

ADDED : நவ 01, 2025 07:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2025 07:09 AM ADDED : நவ 01, 2025 07:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், கல்வித்தரத்தை உயர்த்தவும், பள்ளிக்கல்வி துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வரும் 7ம் தேதி அனைத்து பள்ளிகளிலும், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலாண்மை குழுவில் உள்ள 'இல்லம் தேடி' கல்வியாளர், முன்னாள் மாணவர்கள், சுய உதவிக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகியோரை கொண்ட குழு ஒன்றை அமைத்து.

பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவ -- மாணவியரை அடையாளம் கண்டு பட்டியலிட வேண்டும்; அவர்களை அருகேயுள்ள அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், வரும் ஆண்டுகளில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ - மாணவியரில் யாரேனும் இடை நின்றிருந்தால், அவர்களையும் அடையாளம் கண்டு, பொதுத்தேர்வு எழுதச் செய்து, பள்ளி படிப்பை நிறைவு செய்ய வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை யோசனை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us