sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆதித்யா கல்லுாரியில் விளையாட்டு தின விழா

/

ஆதித்யா கல்லுாரியில் விளையாட்டு தின விழா

ஆதித்யா கல்லுாரியில் விளையாட்டு தின விழா

ஆதித்யா கல்லுாரியில் விளையாட்டு தின விழா


UPDATED : பிப் 27, 2026 02:35 PM

ADDED : பிப் 27, 2026 02:37 PM

Google News

UPDATED : பிப் 27, 2026 02:35 PM ADDED : பிப் 27, 2026 02:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
புதுச்சேரி ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 3ம் ஆண்டு விளையாட்டு தின விழா நடந்தது.

கல்லுாரி நிறுவனர் ஆனந்தன் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யாநாராயண அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி, கல்லுாரி முதல்வர் அருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பல்கலைக்கழகம் உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குநர் இளையராஜா பங்கேற்று, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து, விளையாட்டு விழாவை தொடங்கி வைத்து பேசுகையில், 'மாணவர்கள் தினசரி வாழ்க்கையில் விளையாட்டை ஒரு பகுதியாக்கி கொள்ள வேண்டும்.

அது ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் அதிகரிக்கும், உடல் உள்ளம் ஆரோக்கியமாக இருந்தால் தான் தலைமைத்துவம் பெற முடியும். தலைமைத்துவம் என்பது நம்மிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாத தனித்துவம்' என்றார்.

விழாவில் மாணவர்களுக்கு வாலிபால், கிரிக்கெட், பந்து எறிதல் தடகளப் போட்டிகள், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், எடை எறிதல், கயிறு இழுத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டு சாகசங்கள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

உடற்கல்வி இயக்குநர் சந்திரலேகா ஆண்டறிக்கை வாசித்தார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள், மாணவர் சங்க தலைவர் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us