பல்கலைக்கழக பேராசிரியருக்கு தொலைநோக்கு மகளிர் விருது
பல்கலைக்கழக பேராசிரியருக்கு தொலைநோக்கு மகளிர் விருது
UPDATED : மார் 21, 2026 11:34 AM
ADDED : மார் 21, 2026 11:35 AM

புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியருக்கு தொலைநோக்கு மகளிர் விருது (எஸ்.டி.ஜி.,) வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மேலாண்மை ஆய்வுகள் பேராசிரியராக பணி செய்து வருபவர் சாருமதி. இவர், ஐக்கிய நாடுகள் சபையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை (எஸ்.டி.ஜி.,) முன்னேற்றுவதில் அவரது ஆராய்ச்சியான, பருவ நிலை வெளிபாடு, பெரு நிறுவன தலைமைத்துவத்தின் பாலின பன்முகத்தன்மை ஆராய்ச்சியில் பங்களித்துள்ளார்.
மேலும், கல்வி தலைமை மற்றும் தொழில்முனைவோர் முன் முயற்சிகளுக்கான பங்களிப்பை வழங்கியுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுமை மற்றும் ஸ்டார்ட் அப் சூழலை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு, கண்டுப்பிடிப்பு பட்டறைகள், வழிகாட்டுதல் திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு புதுமையை ஊக்குவித்துள்ளார்.
அதற்காக, கே.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி, ஐ.இ.இ.இ., மகளிர் பொறியியல் நிறுவனம் இணைந்து அவருக்கு (எஸ்.டி.ஜி.,) தொலைநோக்கு மகளிர் விருது வழங்கியுள்ளது. விருது பெற்ற பேராசிரியர் சாருமதியை புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ்பாபு வாழ்த்தினார்.

