UPDATED : மார் 31, 2026 12:34 PM
ADDED : மார் 31, 2026 12:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை அரசு கலைக்கல்லுாரியில் 35 வது பட்டமளிப்பு விழா நடந்தது.
டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பிரேம்குமார் பட்டங்களை வழங்கி பேசுகையில், 'வாய்ப்புகள் நிறைந்த உலகில், கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களும் ஏராளம் உள்ளன. நேரத்தை திறம்பட நிர்வகிப்பவர்களே வெற்றி அடைகிறார்கள். சரியான முடிவுகளை எடுக்கும் அறிவு, சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமை மற்றும் கனவுகளை அடையும் உற்சாகம் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றமே,' என்றார்.
இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளைச் சேர்ந்த ஆயிரத்து 637 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
முதல்வர் எழிலி தலைமை வகித்தார். பாரதியார் பல்கலை செனட் உறுப்பினர் பாலமுருகன், கல்லுாரி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

