sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.எஸ்.எம்., பள்ளியில் மாணவர் படை முகாம்

எஸ்.எஸ்.எம்., பள்ளியில் மாணவர் படை முகாம்

எஸ்.எஸ்.எம்., பள்ளியில் மாணவர் படை முகாம்


UPDATED : மே 13, 2026 06:38 PM

ADDED : மே 13, 2026 06:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2026 06:38 PM ADDED : மே 13, 2026 06:40 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல் அக்கரைப்பட்டி எஸ்.எஸ்.எம்., அகாடமி பள்ளியில் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நடந்து வருகிறது.

எஸ்.எஸ்.எம்., அகாடமி பள்ளியில் திண்டுக்கல் 14ம் படைப்பிரிவின் தேசிய மாணவர் படை சார்பில் மே 6 முதல் மே 15 வரை பள்ளி, கல்லுாரி என்.சி.சி., மாணவர்களுக்கான முகாம் நடக்கிறது.

திண்டுக்கல், தேனி, போடி, உத்தமபாளையம், மதுரை, சோழவந்தான், பழநி, கொடைக்கானல் பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த 450க்கு மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். துப்பாக்கி சுடுதல், வரைபட பயிற்சி, சுத்தம், சுகாதாரத்திற்கான பயிற்சி, அணி நடைபயிற்சி, கூடாரம் அமைத்தல், 10 விதமான தடைகளை தாண்டும் பயிற்சி, ராணுவத்தில் சேர்வதற்கான விழிப்புணர்வு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

சுபேதார் மேஜர் ஆறுமுகம், சுபேதார்கள் சந்திரசேகர், முருகன், காளிதாஸ், பள்ளி, கல்லுாரி என்.சி.சி., அதிகாரிகள் மைக்கேல், பால்பாண்டியன், பாலகுமரன், சித்திரவேல், சித்திக், மாரிமுத்து, சங்கர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் 14ம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நவநீத் கணேஷ் மேற்பார்வை செய்கிறார். ஏற்பாடுகளை எஸ்.எஸ்.எம்., பள்ளி நிர்வாகத்தினர் சிவராஜ், கவுதமி, பள்ளி முதல்வர் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us