நந்தா பொறியியல் கல்லுாரியில் தொழில்துறை கருத்தரங்கம்
நந்தா பொறியியல் கல்லுாரியில் தொழில்துறை கருத்தரங்கம்
UPDATED : மே 13, 2026 06:38 AM
ADDED : மே 13, 2026 06:38 PM
ஈரோடு:
ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரியின் இயந்திரவியல் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில், இந்திய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் உயிரி தொழல்நுட்ப துறையுடன் இணைந்து, 'நிலையான சுகாதார பராமரிப்பிற்காக உருவாகிவரும் போக்குகள்' என்ற தலைப்பில் தொழில்துறை கருத்தரங்கம் நடந்தது.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர் கல்பனா, பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் கோமதி ஆகியோர் சிறப்பாளர்களாக கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் ரகுபதி, புலமுதல்வர்கள் மாரிமுத்து, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இயந்திரவியல் துறை தலைவர் முத்துகுமார் வரவேற்றார்.
பேராசிரியர் கல்பனா, பேராசிரியர் கோமதி மற்றும் நந்தா கல்லுாரி பேராசிரியர் லலிதா ஆகியோர் 'நிலையான சுகாதார பராமரிப்பிற்காக உருவாகி வரும் போக்குகள்' பற்றிய தகவல் களஞ்சியங்களை காணொலி மூலம் விளக்கம் அளித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள மகிபாலன், முருகானந்தம் ஆகியோர் நன்றி கூறினர்.
கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்கள், மாணவர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்களான நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, நந்தா தொழில்நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.
