தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொங்கு பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவில் ஐ.டி.ஈ., பூட்கேம்ப் 2026

கொங்கு பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவில் ஐ.டி.ஈ., பூட்கேம்ப் 2026

கொங்கு பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவில் ஐ.டி.ஈ., பூட்கேம்ப் 2026


UPDATED : மே 13, 2026 06:34 PM

ADDED : மே 13, 2026 06:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2026 06:34 PM ADDED : மே 13, 2026 06:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில், மே 11 முதல் 15 வரை கல்வித்துறை மற்றும் ஆல் இந்தியா கவுன்சில் பார்டெக்னிக் எஜூகேஷனின் உதவியுடன், ஐ.டி.ஈ., பூட்கேம்ப் பதிப்பு 3, கட்டம் 3ஐ ஏற்பாடு செய்துள்ளது.

இந்த தேசிய அளவிலான ஐந்து நாள் பூட்கேம்ப், இளம் புதுமையாளர்களின் புதுமை, ஸ்டார்ட் அப் கலாசாரம், தயாரிப்பு மேம்பாடு மற்றும் நிறுவன சிந்தனையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய அளவில், பொறியியல், பல்மருத்துவம் உள்ளிட்ட 20 கல்வி நிறுவனங்களில் பயிலும், 75 அணிகளின், 300 மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியை நடத்த ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டிட்கோவின் டிஎன்ரிசர்ச் பார்க்ஃபவுண்டேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் கே.சுந்தர வேலு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நோடல் சென்டர் தலைவர் சரீம்மோயின், கல்லுாரி தாளாளர் கிருஷ்ணன், முதல்வர் முனைவர் பரமேஸ்வரன், ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us