திருவான்மியூர் ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவக்கம்
திருவான்மியூர் ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவக்கம்
UPDATED : மே 23, 2026 01:59 PM
ADDED : மே 23, 2026 02:00 PM
திருவான்மியூர் ஐ.டி.ஐ., மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
திருவான்மியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையமான ஐ.டி.ஐ.,யில், 2026ம் ஆண்டிற்கான, மாணவ மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் ப்ரோக்ராமிங் அசிஸ்டன்ட், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நான்கு தொழிற்பிரிவுகளில், பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பிற்சிக்கு கட்டணம் கிடையாது. விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, விலையில்லா பாடப்புத்தகம், சீருடை, வரைபட கருவிகள், மாதாந்திர உதவித்தொகை, 750 ரூபாய், தகுதியுள்ள மாணவியருக்கு, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும், 1,000 ரூபாய், உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோர் ஜூன் 3ம் தேதிக்குள், உரிய சான்றிதழ்களுடன், திருவான்மியூரில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாகவோ அல்லது என்ற www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 91591 62630; 81221 28123; 63200 0343; 99403 71443 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
