தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ்., படித்தவர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி

வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ்., படித்தவர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி

வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ்., படித்தவர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி


UPDATED : ஜூலை 01, 2026 11:12 AM

ADDED : ஜூலை 01, 2026 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 11:12 AM ADDED : ஜூலை 01, 2026 11:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ்., படித்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தமிழகத்தில் கட்டாய மருத்துவப் பயிற்சி பெற வேண்டும். இதற்கு போதிய இடங்கள் இல்லாததால், பயிற்சி பெற முடியாமல் அவர்கள் தவித்தனர்.

இதையடுத்து, தேசிய மருத்துவ கமிஷனிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து, கூடுதல் இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 13 இதர மருத்துவமனைகளில் இவர்கள் பயிற்சி பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அரசு மருத்துவ கல்லுாரிகளில் ஏற்கனவே உள்ள 384 இடங்களுடன், கூடுதலாக மாவட்ட மருத்துவமனைகளில் 750 இடங்களும், இதர மருத்துவமனைகளில் 370 இடங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

இனி ஆண்டுதோறும் மொத்தம் 1,504 மாணவர்கள் பயிற்சி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல் பயிற்சி டாக்டர்களால் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு கிடைக்கும் மருத்துவச் சேவைகள் மேலும் மேம்படும்.

தகுதியுடைய மாணவர்கள் இன்று முதல் https://fmg.tnmedicalonline.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us