தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு


UPDATED : ஜூலை 20, 2026 04:03 PM

ADDED : ஜூலை 20, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2026 04:03 PM ADDED : ஜூலை 20, 2026 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து, கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:


கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து, வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத பொது பிரிவினருக்கு, மாதாந்திர உதவித்தொகையாக, 200 ரூபாய், மாற்றுத்திறனாளிக்கு, 600 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினருக்கு, 400 ரூபாய், மாற்றுத்திறனாளிகளுக்கு, 750 ரூபாய், பட்டதாரி பொது பிரிவினருக்கு, 600 ரூபாய் மாற்றுத்திறனாளிகளுக்கு, 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை பெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், 45 வயதும், இதர வகுப்பினர், 40 வயதும் மாற்றுத்திறனாளிக-ளுக்கு வயது வரம்பும் இல்லை. மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை http://tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதவிறக்கம் செய்து ஆக., 31க்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us