UPDATED : செப் 01, 2026 05:34 PM
ADDED : செப் 01, 2026 05:35 PM
கோவை:
பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் விஜயா மற்றும் குழுவினர் நேரடி ஆய்வு நடத்தினர்.
குழந்தைகளுக்கான வசதிகளை பார்வையிட்டதோடு வருகை பதிவேடு, சத்துணவின் தரம், உணவு பொருட்கள் இருப்பு குறித்து சரிபார்த்தனர்.
அதோடு, அங்கிருந்த குழந்தைகளின் எடை, உயரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கேட்டறிந்தனர்.இதை தொடர்ந்து, ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் கூர்நோக்கு இல்லம் மற்றும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம் ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தினர்.
பள்ளிகளிலும் இல்லங்களிலும் குழந்தைகள் தங்களின் குறைகளை தெரிவிக்க வைக்கப்பட்டிருக்கும் மாணவர் மனசு புகார் பெட்டி சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கமிஷன் உறுப்பினர்கள்; மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
