UPDATED : அக் 07, 2026 01:23 PM
ADDED : அக் 07, 2026 01:24 PM
அ நிறம் | அளவு
உடுமலை:
சர்வதேச விண்வெளி வாரத்தையொட்டி, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறி போட்டிகள் வரும் 10ம் தேதி உடுமலையில் நடக்கிறது.
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், ஸ்ரீ ஆண்டாள் அறக்கட்டளை சார்பில் இப்போட்டிகள், உடுமலை வித்யாசாகர் கல்லுாரியில் நடக்கிறது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், இஸ்ரோ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களுக்கு களப்பயணமாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு, ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை 99424 67764, 87782 01926 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
