தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி தயாரித்த உரம் பள்ளிகளுக்கு வினியோகம்

மாநகராட்சி தயாரித்த உரம் பள்ளிகளுக்கு வினியோகம்

மாநகராட்சி தயாரித்த உரம் பள்ளிகளுக்கு வினியோகம்


UPDATED : அக் 10, 2026 01:50 PM

ADDED : அக் 10, 2026 01:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 01:50 PM ADDED : அக் 10, 2026 01:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
மக்கும் கழிவுகள் மற்றும் தோட்டகழிவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 4.25 டன் இயற்கை உரத்தை, பள்ளிகள் மற்றும் டில்லி துணை நிலை கவர்னர் அலுவலகம் ஆகியவற்றிற்கு புதுடில்லி மாநகராட்சி வழங்கி உள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்ககப்படும் கழிவுகளை பயன்படுத்தி, டில்லி மாநகராட்சி இயற்கை உரம் தயாரிக்கிறது. இவற்றை தேவைப்படுவோருக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில், பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை முறையை ஊக்குவிக்கும் விதத்தில், மக்கும் கழிவுகள் மற்றும் தோட்டக்கழிவுகளை பயன்படுத்தி, 4.25 டன் இயற்கை உரத்தை டில்லி மாநகராட்சி தயாரித்துள்ளது. இவற்றை உள்ளூர் பள்ளிகள் மற்றும் டில்லி துணை நிலை கவர்னர் அலுவலகங்களுக்கு, டில்லி மாநகராட்சி வழங்கி உள்ளது.

இதில், 1,250 கிலோ உரம், ஏற்கனவே 11 பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,000 கிலோ உரம், 30 பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. டில்லி துணைநிலை கவர்னரின் அலுவலகமான, 'லோக் நிவாஸ்'ன் பிரதிநிதிகளிடமும் 1,000 கிலோ உரத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்தது.

வழக்கமான கழிவு அகற்றல் முறைகளைப் போல இல்லாமல், சாணக்யபுரியில் உள்ள புதுடில்லி மாநகராட்சியின் அதிநவீன நாற்றங்கால் மையத்தில் உள்ள, செயலாக்க நிலையத்தில் இந்த உரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு உள்ளூரில் சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகள் பதப்படுத்தப்படுகின்றன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us