UPDATED : அக் 10, 2026 02:03 PM
ADDED : அக் 10, 2026 02:05 PM
கோவை:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர் (பண்ணை) பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பி.எஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை அறிவியல், வனவியல் அல்லது மீன்வள அறிவியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம்; குறைந்தபட்சம் 27 வயது; அதிகபட்சம் 65 வயது.
அரசு திட்டங்கள், அரசு சாரா, தனியார் நிறுவனங்கள் அல்லது விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளில் களப்பணியில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம்.
தகுதியுள்ளவர்கள், உரிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் வரும் 16ம் தேதி மாலை 5:45 மணிக்குள் 'செயலாளர், கோவை மாவட்ட முகமை, வட்டார வளர்ச்சி அலுவலகம், பாலக்காடு மெயின் ரோடு, மதுக்கரை' என்ற முகவரிக்கு அல்லது makamaikovai@gmail.com என்ற இ-மெயிலில் அனுப்பலாம்.
