UPDATED : நவ 09, 2026 12:33 PM
ADDED : நவ 09, 2026 12:35 PM
அ நிறம் | அளவு
உடுமலை:
உடுமலை பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 14வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
விழாவில், பள்ளியின் தலைவர் ராமகிருஷ்ணன், பள்ளி தாளாளர் அருண்கார்த்திக் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக உடுமலை ஆர்.வி., மருத்துவமனை டாக்டர்கள் சிவசண்முகம், ரமாதேவி பங்கேற்றனர்.
பள்ளியின் செயலாளர் துர்கேஷ்நந்தினி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நடராஜன் வரவேற்று விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் நடந்தது.
பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அகிம்சா அணி கைப்பற்றியது.
