தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மரபுவழி வேளாண் மையத்தில் மாணவிகள் களப்பயிற்சி

மரபுவழி வேளாண் மையத்தில் மாணவிகள் களப்பயிற்சி

மரபுவழி வேளாண் மையத்தில் மாணவிகள் களப்பயிற்சி


UPDATED : நவ 12, 2026 02:17 PM

ADDED : நவ 12, 2026 02:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 02:17 PM ADDED : நவ 12, 2026 02:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்:
முருகன்குடி செந்தமிழ் மரபுவழி வேளாண் மையத்தில், மாணவிகள் களப்பயிற்சி மேற்கொண்டனர்.

திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு மாணவிகள் ரித்திகா, சஹானா ஷாஜிதா, ஷாலினி, சந்தியா, சவுமியா, சஹானா, ஷாலினி, ஸ்ரீதுர்கா, ஸ்ரீப்ரியா, சுபிதா, சிந்துஜா ஆகியோர், முருகன்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவத்தில் களப்பணி மேற்கொண்டனர்.

அதன், ஒருங்கிணைப்பாளர் இயற்கை விவசாயி முருகன், ரசாயண உரங்களால் மண்ணில் உப்புத்தன்மை அதிகரித்தல், இயல்பு நிலை மாறுதல், நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற பாதிப்புகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கமளித்தார்.

மேலும், மண்ணின் கரிமச்சத்தை பாதுகாத்து, இயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்துவதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து கலந்துரையாடல் நடந்தது. மேலும், இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு, பூச்சி விரட்டிகள் தயாரிப்பு குறித்து மாணவிகளுக்கு செயல்விளக்கம் தரப்பட்டது.

மேலும், பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வு, மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us