தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நோய் தடுப்புக்கான ஏ.ஐ., செயலி அறிமுகம்

நோய் தடுப்புக்கான ஏ.ஐ., செயலி அறிமுகம்

நோய் தடுப்புக்கான ஏ.ஐ., செயலி அறிமுகம்


UPDATED : நவ 15, 2026 01:16 PM

ADDED : நவ 15, 2026 01:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 01:16 PM ADDED : நவ 15, 2026 01:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
நோய் தடுப்பு மற்றும் ஆரம்பகாலப் பரிசோதனையை ஊக்குவிக்கும் வகையில், கோவையைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் ஆதித்யன் குகன், ஏஜிஎஸ் ஹெல்த்கேர் சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி மூலம், வயது, உடல்நிலைக்கு ஏற்ப முழுமையான உடல்நலப் பரிசோதனைத் தொகுப்புகளை முன்பதிவு செய்யலாம். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களது உறவினர்களுக்கு பரிசோதனைத் தொகுப்புகளைப் பரிசாக வழங்கும் 'வாழ்வின் பரிசு' வசதியும் இடம்பெற்றுள்ளது.

இந்த செயாலியில் தனிப்பயனாக்கு வசதி, ஏ.ஐ அடிப்படையிலான உரையாடல் வசதியும், சந்தை வசதி மூலம் மருத்துவர் ஆலோசனை, ஆய்வகப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், எக்கோ, ஈசிஜி உள்ளிட்ட சேவைகளை முன்பதிவு செய்யலாம். அவசர காலத்தில் உதவுவதற்கான எஸ்.ஓ.எஸ். வசதியும், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரிவும் செயலியில் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து டாக்டர் ஆதித்யன் குகன் கூறுகையில், நோய்கள் ஏற்படுவதற்கு முன்பே ஆபத்துகளைக் கண்டறிந்து உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள மக்களை ஊக்குவிப்பதே செயலியின் நோக்கம் என்றார். உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us