தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘நீண்ட அறிவுரையால் மாற்றம் கொண்டுவர முடியாது’

‘நீண்ட அறிவுரையால் மாற்றம் கொண்டுவர முடியாது’

‘நீண்ட அறிவுரையால் மாற்றம் கொண்டுவர முடியாது’


UPDATED : நவ 27, 2010 12:00 AM

ADDED : நவ 27, 2010 11:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2010 12:00 AM ADDED : நவ 27, 2010 11:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘நீண்ட அறிவுரையால் இன்றைய மாணவர்களிடம் மாற்றம் கொண்டுவர முடியாது’ என்று கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.


சென்னையில் கோமுகி பதிப்பகம் சார்பில், ஏழு நூல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பக்கத்து வீடு என்ற நூலை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், அன்புள்ள மாணவனே, என்ற நூலை பேராசிரியர் பழமலய், சட்டை முனி ஞானம் ,என்ற நூலை பொறியாளர் அண்ணாமலை சுகுமாறன், நலமாக வாழ நல்வாழ்வுக் குறிப்புகள், என்ற நூலை பேராசிரியர் பொன்.


பத்மநாபன், மாணவர்களுக்கான அறிவியல் வினா விடை என்ற, நூலை புலவர் ராமலிங்கம், பொது அறிவுக் களஞ்சியம், என்ற நூலை அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், செய்திக் கோவை, என்ற நூலை புலவர் சுந்தரம் ஆகியோர்கள் வெளியிட்டனர்.


பொது அறிவுக் களஞ்சியம் நூலை வெளியிட்டு அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியதாவது: என்னை முதும்பெரும் அறிஞர்களுடன் பல விழாக்களில் என்னை ஒப்பிடும் போது கூச்சமும், கோபமும் வருவதுண்டு.


வாழ்வை இலக்கியத்திற்காக, தியாகம் செய்தவர்கள் மத்தியில் உண்மையில் நான் யார் என்று கேட்பதுண்டு. எழுத்துக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர்களுக்கு மரியாதை கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். நவீனம் என்ற பெயரில் பழந்தமிழுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வரும் எழுத்தாளர்கள் மத்தியில், இந்த நூலாசிரியர்கள் அதை செய்யாதது சற்று மன ஆறுதலை தருகிறது.


சிலப்பதிகாரம், கம்பராமாயணம் ஆகிய பழந்தமிழ் இலக்கியங்கள், பல ஆண்டுகளை கடந்து இன்றும் நிலைத்து நிற்கிறது. இன்று, நவீன எழுத்தாளர்கள் உருவாக்கி வரும் நூல்கள் எத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்கும்? பழந்தமிழையும் கற்கும் ஆவல் நவீன எழுத்தாளர்களிடம் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் திருப்பூர் கிருஷ்ணன் பேசினார்.


‘பக்கத்து வீடு’என்ற நூலை வெளியீட்டு கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது,“ இயங்கும் தளம் எதுவாக இருந்தாலும், எழுத்து மூலம் இயங்கும் போது, சிக்கல் ஏற்படும், நிலை உருவாகும் காலகட்டத்தில் இருக்கிறோம்.


சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட விஷயத்தை, உதாரணத்துடன் பக்கத்து வீடு நூலின் ஆசிரியர் முத்தையன் இந்த நூலில் குறிப்பிட தக்க ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உனக்காக தான் வாழ்கிறோம், என கூறும் பெற்றோரை குழந்தைகள் விரும்புவதில்லை. நீண்ட அறிவுரை மூலம் மிகப்பெரிய மாற்றத்தை, இன்றைய மாணவர்களிடம் கொண்டு வர முடியாது,” என்றார்.


நூலாசிரியர்கள் அங்கமுத்து, பிரேமா அரவிந்தன், செந்தில்குமார், மணிவண்ணன் மற்றும் இறை எழிலன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us