தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எளிய முறையில் தமிழ் கற்றல் பயிலரங்கம்

எளிய முறையில் தமிழ் கற்றல் பயிலரங்கம்

எளிய முறையில் தமிழ் கற்றல் பயிலரங்கம்


UPDATED : டிச 29, 2010 12:00 AM

ADDED : டிச 29, 2010 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 29, 2010 12:00 AM ADDED : டிச 29, 2010 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ் துறையின் சார்பாக எளிய முறையில் தமிழ் கற்றல் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது. செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் சிந்தாமணி வரவேற்றார். முதல்வர் சுசீலா தலைமை வகித்தார்.


முனைவர்கள் நடராஜப்பிள்ளை, கணேசன் இருவரும் எளிதில் கற்கும் வகையில் கணினியின் மூலம் தமிழை கற்பித்தனர். ஒலிநாடாக்கள், ஒளிச்சுருள்கள், குறுந்தகடுகள், காணொலிக்காட்சிகள் போன்றவற்றின் மூலம் தமிழ் எழுத்துகள் அவற்றின் வடிவங்கள், சொற் பயிற்சிகள், சொல் விளையாட்டுகள் போன்றவற்றின் மூலம் மாணவர்கள் உற்சாகப்படுத்தினர்.


தமிழ் மொழி கற்றலில் தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை புதுப்புது முறைகளில் மாணவர்களுக்கு விளக்கினர். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து தமிழ் அல்லாத பிறமொழியை சார்ந்த ஹிந்தி, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us