அரியானாவில் கல்பனா சாவ்லா பெயரில் மருத்துவக்கல்லூரி
அரியானாவில் கல்பனா சாவ்லா பெயரில் மருத்துவக்கல்லூரி
UPDATED : ஜன 08, 2011 12:00 AM
ADDED : ஜன 08, 2011 02:28 PM
சண்டிகார்: நாசா விண்வெளி வீராங்கனை மறைந்த கல்பனா சாவ்லா பெயரி்ல் அவரது பிறந்த ஊரில் மருத்துக்கல்லூரி ஒன்றை அமைக்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (48) .
அரியனா மாநிலத்தைச் சேரந்த இவர் கடந்த 2003-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சார்பில் ஆறு பேர் கொண்ட குழுவுடன் கொலம்பியா விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுவிட்டு பூமிக்கு திரும்பி கொண்டிருந்த போது வெடித்து சிதறியதி்ல் பலியானார்.
இந்நிலையில் இவர் பிறந்த ஊரான கர்னூல் நகரில் இவரது பெயரில் மருத்துவக்கல்லூரி தொடங்க அரியானா அரசு முடிவு செய்து, அதற்கான செய்தி குறிப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்காக சண்டிகாரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் கல்பனா சாவ்லா பிறந்த ஊரான கர்னூல் நகரில் 35 ஏககர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூயின் தரம் உயர்த்தப்பட்டு மருத்துவ படிப்பு இடங்களை 50 -லிருந்து 100 ஆக உயர்த்தவும், மருத்துவமனைக்கான படுக்கை அறையினை 400 லிருந்து 500ஆக உயர்த்தவும் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
