UPDATED : ஜன 19, 2011 12:00 AM
ADDED : ஜன 19, 2011 10:31 AM
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் பாங்க் ஆப் பரோடா ஒரு சர்வதேச வங்கியாகத் திகழ்கிறது. இந்த வங்கிக்கு இந்தியாவில் 3 ஆயிரத்து 200 கிளைகளும், சர்வதேச அளவில் 26 நாடுகளில் கிளைகளும் உள்ளன. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ரீதியான முன்னேற்றங்களை வாடிக்கையாளர் களின் சேவைக்காக உபயோகிப் பதில் இந்த வங்கி முதன்மை பெற்று சிறந்து விளங்குகிறது. இந்த வங்கியில் ஆயிரத்து ஐநூறு கிளரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு
பாங்க் ஆப் பரோடாவின் கிளரிகல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.01.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு நிபந்தனைகளுக்கு ஏற்றபடி எஸ்.சி., எஸ்.டி., மற்றும் இதர பிரிவினருக்கு சலுகைகள் உள்ளது. முழு விபரங்களுக்கு இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி
பாங்க் ஆப் பரோடாவில் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2விற்கு நிகரான படிப்பில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்களும், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் மூலமாக டிப்ளமோ இன் பேங்கிங் படிப்பை முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் பாங்க் ஆப் பரோடாவின் கிளரிகல் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரங்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்
பாங்க் ஆப் பரோடாவின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/ கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.50/ மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. இந்தக் கட்டணத்தை ஏதாவது ஒரு பாங்க் ஆப் பரோடாவின் கிளைக்கு சென்று பந்திரா, குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள கிளையின் "29040200000199" என்ற கணக்கு எண்ணில் "RECRUITMENT OF 1500 CLERICAL STAFF PROJECT 2011" என்ற பெயரில் கட்ட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் முறையில் மட்டுமே பாங்க் ஆப் பரோடாவின் கிளரிகல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முன் முதலில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதன் பின்னர் உங்களுக்கான உபயோகத்திலுள்ள பிரத்யேக இமெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்த பின் ஆன்லைனில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் இணைய தளத்தில் விபரங்களை முழுமையாக அறியவும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைன் கட்டணம் மற்றும் பதிவு துவங்கும் நாள்: 17.01.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 17.04.2011
ஆன்லைன் பதிவு முடியும் நாள்: 10.02.2011
இணைய தள முகவரி: www.bankofbaroda.com
