மகாராஷ்டிராவில் மருத்துவப் படிப்பிற்கான கட்டணம் உயர்வு
மகாராஷ்டிராவில் மருத்துவப் படிப்பிற்கான கட்டணம் உயர்வு
UPDATED : பிப் 11, 2011 12:00 AM
ADDED : பிப் 11, 2011 05:00 PM
மும்பை: மருத்துவப்படிப்பிற்கான கட்டணங்களை இரு மடங்கு மகாராஷ்டிர அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பிப்.14-ம் தேதியை கருப்பு தினமாக கொண்டாட உள்ளனர்.
மகாராஷ்டிர அமைச்சரவைக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இந்தாண்டு 2011-ம் ஆண்டிற்கான மருத்துவபடிப்பு கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ரூ.18 ஆயிரம் என்பதை ரூ.40 ஆயிரமாகவும், பல் மருத்துவப்படிப்பிற்கு ரூ.15 ஆயிரம் என்பதை ரூ.30 ஆயிரம், மற்றும் ஆயுர்வேதம், யுனானி மருத்துவபடிப்பிற்கு ரூ. 7 ஆயிரம் என்பதை ரூ. 15 ஆயிரம் எனவும் உயர்த்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஆண்டு தோறும் 10 சதவீதம் மருத்துவபடிப்பிற்கு கட்டணங்கள் உயர்த்தப்படும். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக உயர்த்தப்படவில்லை.
கடந்த 2003-ம் ஆண்டு புதிய கட்டண விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பயிற்சி டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரும் பிப்.14-ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்துள்ளனர்.
