தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிளரிகல் காலியிடங்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிளரிகல் காலியிடங்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிளரிகல் காலியிடங்கள்


UPDATED : மார் 15, 2011 12:00 AM

ADDED : மார் 15, 2011 12:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2011 12:00 AM ADDED : மார் 15, 2011 12:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.ஓ.பி., என்று அனைவராலும் அறியப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு பொதுத் துறையில் வெற்றிகரமாக இயங்கி வரும் வங்கியாகும். இந்தியா மட்டுமின்றி உலகில் பல்வேறு பகுதிகளிலும் தனது கிளைகளைக் கொண்டுள்ள ஐ.ஓ.பி., ஓவர்சீஸ் சேவைகளுக்கும், பாரின் எக்ஸ்சேஞ்சிற்கும் பெயர் பெற்றது.


நவீனமயமாக்கப்பட்ட கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை, பரந்து விரிந்த கிளைகள் என்ற பல்வேறு சிறப்பு பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1100 கிளரிகல் காலி இடங்களைநிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த இடங்களில் அரசு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.


என்ன தேவை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.01.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிளஸ் 2விற்கு இணையான படிப்பில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.


குறைந்த பட்ச மதிப்பெண்களைப் பொறுத்தவரை எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு சலுகைகள் உள்ளது. முழு விபரங்கள் அறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும். மேற்கண்ட தகுதிகளுடன் ஆங்கிலத்தில் எழுதும் மற்றும் பேசும் திறன், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் அலுவலக மொழியில் திறன் போன்றவையும் கூடுதலாகத் தேவைப்படும்.


தேர்ச்சி முறை
ஐ.ஓ.பி.,யின் கிளரிகல் காலியிடங்கள் எழுத்துத் தேர்வு இதன் பின்னர் நேர்காணல் என்ற அடிப்படையில் நிரப்பப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்ச்சி மையங்கள்
இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மையங்களிலும், புதுச்சேரியிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி
ஐ.ஓ.பி.,யின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க முதலில் ரூ.250/ஐ ஏதாவது ஒரு ஐ.ஓ.பி., வங்கிக் கிளையில் குறிப்பிட்ட அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ரூ.50/ மட்டும் செலுத்தினால் போதுமானது.


விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர் ஆன்லைனில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதால் முதலில் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள பிரத்யேகமான ஒரு இமெயில் முகவரி இருப்பதை உறுதி செய்யவும். விண்ணப்பிப்பது தொடர்பான முழு விபரங்கள் அறிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.


முக்கிய தேதிகள்
விண்ணப்பக் கட்டணம் செலுத்த மற்றும் ஆன்லைன் பதிவு செய்ய இறுதி நாள் : 25.03.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 29.05.2011
இணைய தள முகவரி :
www.iob.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us