UPDATED : மார் 29, 2011 12:00 AM
ADDED : மார் 29, 2011 09:51 AM
அ நிறம் | அளவு
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு பணியில் ஈடுபடும் கண்காணிப்பாளர்களை தினமும் ஒரு பள்ளியில் பணி வழங்குவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும்.
பத்தாம் வகுப்பு தேர்வில் முதன்மை, உதவி கண்காணிப்பாளர்கள், தேர்வுகள் முடியும் வரை ஒரே பள்ளியில் பணியாற்றுகின்றனர்.
இவர்களை பள்ளி நிர்வாகங்கள் "கவனித்து" விடுகின்றன. இதற்கு பிரதிபலனாக பள்ளி நிர்வாகம் எதிர்பார்க்கும் 100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களுக்கு விடைகளை பல வழிகளில் தெரிவிக்கின்றனர்.
பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் வேறு பள்ளிகளுக்கு பணி மாற்றம் செய்து அனுப்பப்படுகின்றனர். இதே நிலையை பத்தாம் வகுப்புக்கும் கடை பிடித்தால் முறைகேடுகளை தவிர்க்க முடியும்.
