தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இதழியல் பாடத்திற்கு பொது நுழைவுத் தேர்வு

இதழியல் பாடத்திற்கு பொது நுழைவுத் தேர்வு

இதழியல் பாடத்திற்கு பொது நுழைவுத் தேர்வு


UPDATED : ஏப் 12, 2011 12:00 AM

ADDED : ஏப் 12, 2011 09:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 12, 2011 12:00 AM ADDED : ஏப் 12, 2011 09:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டெல்லியில் பி.ஏ. (ஹானர்ஸ்) இதழியல் பாடப்பிரிவை வழங்கும் டெல்லி கலை மற்றும் வணிகக் கல்லூரி, கமலா நேரு கல்லூரி, லேடி ஸ்ரீ ராம் கல்லூரி, கலிந்தி கல்லூரி மற்றும் மஹாராஜா அக்ரசன் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகளும் இணைந்து வரும் ஜுன் மாதம் 19ஆம் தேதி பொது நுழைவுத் தேர்வினை நடத்த முடிவு செய்துள்ளது.


பி.ஏ. (ஹானர்ஸ்) இதழியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்றும், ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாகச் சென்று விண்ணப்பங்களை வாங்கி, தனித்தனியாக நுழைவுத் தேர்வு எழுதுவதில் இருந்து மாணவர்கள் நிம்மதி பெறுவார்கள் என்பதற்காகவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும், ஒரு சில கல்லூரிகளில் ஒரே நாளில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதால், மாணவர்கள் ஏதேனும் ஒரு நுழைவுத் தேர்வை மட்டும் எழுதும் நிலையும் ஏற்பட்டது.


இதனைத் தவிர்க்க, 5 கல்லூரிகளும் சேர்ந்து ஒரே நுழைவுத் தேர்வினை நடத்துகிறது. இந்த ஆண்டு மஹாராஜா அக்ரசன் கல்லூரி நுழைவுத் தேர்வினை நடத்துகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us