UPDATED : ஏப் 12, 2011 12:00 AM
ADDED : ஏப் 12, 2011 09:56 AM
அ நிறம் | அளவு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன்(11-04-2011) முடிந்தது.
மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்திய பொதுத்தேர்வுகள் கடந்த 22ம் தேதியில் இருந்தும், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள், 28ம் தேதியில் இருந்தும் நடந்து வந்தன. மொத்தம் பத்தரை லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இத்தேர்வு நேற்றுடன் முடிந்தது.
இதற்கிடையே, 43 மையங்களில் நடந்துவந்த பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நேற்றுடன் முடிந்தன. தேர்வு முடிவுகளை கடந்த ஆண்டைப்போல், மே இரண்டாவது வாரத்தில் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
