தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்டாப் செலக்சன் கமிஷன் அறிவித்துள்ள பணிகள்

ஸ்டாப் செலக்சன் கமிஷன் அறிவித்துள்ள பணிகள்

ஸ்டாப் செலக்சன் கமிஷன் அறிவித்துள்ள பணிகள்


UPDATED : ஏப் 20, 2011 12:00 AM

ADDED : ஏப் 20, 2011 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2011 12:00 AM ADDED : ஏப் 20, 2011 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் 3ம் நிலை மற்றும் 2ம் நிலை பணி இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் என்னும் மத்திய அரசு ஊழியர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி நிரப்புவது நாம் அறிந்ததுதான். இது 45 அசிஸ்டன்ட் இன்டெலிஜன்ஸ் ஆபிசர், 16 சீனியர் டெக்னிகல் அசிஸ்டன்ட், 5 பொடானிகல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.



வயது வரம்பு
எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பொடானிகல் அஸிஸ்டெண்ட் பதவிக்கு உச்ச பட்ச வயது 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



கல்வித் தகுதி
அசிஸ்டன்ட் இன்டெலிஜன்ஸ் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்களும், எம்.சி.ஏ., பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் ஐ.டி., எம்.எஸ்.சி., பிஸிக்ஸ் படிப்பில் வயர்லெஸ் டெக்னாலஜியைப் பாடமாகப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பொடானிகல் அசிஸ்டன்ட் பதவிக்கு பி.எஸ்.சி., ஹானர்ஸ் அல்லது பி.எஸ்.சி., படிப்பில் தாவரவியல் படிப்பைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



சீனியர் டெக்னிகல் அசிஸ்டன்ட் பதவிக்கு விண்ணப்பிக்க முதுநிலைப் பட்டப்படிப்பில் ஜியாலஜி, ஹைட்ராலஜி அல்லது அப்ளைடு ஜியாலஜியை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவுகள் பற்றிய முழு விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.



தேர்ச்சி முறை
ஸ்டாப் செலக்சன் கமிசன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படைகளில் தேர்ச்சி செய்ய உள்ளது.



விண்ணப்பக் கட்டணம்
எஸ்.எஸ்.சி., யின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தபால் அலுவலகத்தில் இருந்து ரூ.50/க்கான சென்ட்ரல் ரெக்ரூட்மெண்ட் ஸ்டாம்ப் வாங்கி அனுப்ப வேண்டும். வேறு எந்த முறையிலும் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடியாது. 



விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, தேர்வுக் கட்டணத்தை இணைத்துப் பின்வரும் முகவரிக்கு 05.05.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.



முகவரி
The Regional Director ( SR ),
Staff Selection Commission,
2nd Floor, EVK Sampath Building,
College Road,
CHENNAI - 600217.



விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.05.2011

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us