தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி மலர் அரங்கில் மாணவர்களுக்கு பரிசு

கல்வி மலர் அரங்கில் மாணவர்களுக்கு பரிசு

கல்வி மலர் அரங்கில் மாணவர்களுக்கு பரிசு


UPDATED : மே 02, 2011 12:00 AM

ADDED : மே 02, 2011 02:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2011 12:00 AM ADDED : மே 02, 2011 02:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வி தகவல்களை எந்நேரமும் அறிந்து கொள்ளும் வகையில், தினமலர் நாளிதழ் www.kalvimalar.com என்ற இணைய தளத்தை நடத்தி வருகிறது.


திருப்பூரில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் தினமலர் கல்விமலர்.காம் ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். இணையதளத்தில் உள்ள சேவை, பல்கலை தகவல், கல்லூரி ஒப்பீடு, நுழைவுத்தேர்வு, பாடப்பிரிவு, தொலைநிலை கல்வி, கல்வியாளர்கள் கருத்துகள், தேர்வு முடிவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


மேலும், கல்விமலர் இணையதளத்தின் சேவை மற்றும் கல்விமலர் ஸ்டால் குறித்து கருத்து எழுதும் போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறந்த கருத்தை பதிவு செய்த மாணவ, மாணவியருக்கு அப்துல் கலாம் எழுதிய புத்தகங்கள், டி-சர்ட் பரிசு வழங்கப்பட்டது.


பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்கள், தேர்வு முடிவை இலவசமாகவும், உடனடியாக தெரிந்து கொள்ளவும், தங்கள் தேர்வு எண், மொபைல் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்தனர். தேர்வு முடிவு வெளியானதும், ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு, அவர்களது மொபைல் மற்றும் இ-மெயிலில் தகவல் அனுப்பப்படும். இதற்கு ஏராளமான மாணவ - மாணவியர் தங்களது தேர்வு எண்ணை பதிவு செய்தனர்.


கல்விமலர் இணையதளத்தில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிவை வழங்குவதுடன், அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us