தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க காலக்கெடு

கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க காலக்கெடு

கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க காலக்கெடு


UPDATED : மே 05, 2011 12:00 AM

ADDED : மே 05, 2011 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2011 12:00 AM ADDED : மே 05, 2011 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை பல்கலை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், 70 சதவீதம் பேர் நியமனத்திற்கு, பல்கலையின் ஒப்புதலை பெறாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான ஆவணங்களை நேரில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவும், தேவையான இடங்களில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கவும், ஜூன் இறுதி வரை கெடு விதித்து, துணைவேந்தர் திருவாசகம் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து, சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை பல்கலையின் கீழ், கலை, அறிவியல் கல்லூரிகள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் என மொத்தம் 1,089 கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும், உரிய கல்வித் தகுதியை பெற்றிருக்கின்றனரா என்பதை அறிய, கல்லூரிகளிடம் உரிய விவரங்களை கேட்டிருந்தோம். அவர்கள் அளித்த தகவல்களை ஆராய்ந்ததில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மட்டும் 70 சதவீத ஆசிரியர்களுக்கு, பல்கலையின் ஒப்புதலை பெறாதது கண்டுபிடிக்கப்பட்டது.


இவை, பெரும்பாலும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளாக இருக்கின்றன. பல்கலை ஒப்புதல் பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் பலர், 10 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வித் தகுதியை பெற்றவர்களாக இருக்கின்றனர். இவர்களின் பணியை ஒழுங்குமுறைப்படுத்துவது குறித்து, "சிண்டிகேட்&' கூட்டத்தில் விவாதித்து, சில முடிவுகளை எடுத்துள்ளோம். அதன்படி, பழைய கல்வித்தகுதி அடிப்படையில் நியமனம் பெற்றவர்கள் குறித்த சான்றிதழ்களை, கல்லூரி நிர்வாகங்கள் நேரில் சமர்ப்பித்து, பல்கலையின் ஒப்புதலை பெற வேண்டும். இனிமேல், புதிதாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமெனில், அவர்கள், நெட் அல்லது, ஸ்லெட் தேர்வு அல்லது பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும். இதில், குறைபாடு உள்ள ஆசிரியர்கள், உரிய கல்வித் தகுதியைப் பெற, ஒரு ஆண்டு கால அவகாசம் கொடுத்துள்ளோம்.


அதேபோல், கல்லூரி முதல்வர்களில் 30 சதவீதம் பேருக்கு, பல்கலையின் ஒப்புதல் பெறவில்லை. முதல்வர் பணியிடத்தில், ஆறு மாதங்கள் பொறுப்பு நிலையில் நியமிக்கலாம் என கூறினோம். ஆனால், 30 சதவீத முதல்வர்களும், பொறுப்பு நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்களில், இயக்குனரை நியமிக்க வேண்டுமென ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துள்ளது. இதுவும் சரிவர பூர்த்தி செய்யப்படவில்லை. இது குறித்து கேட்டால், பிஎச்.டி. முடித்தவர்கள் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். பல பாடங்களுக்கு, ஸ்லெட், நெட் தகுதியை நிர்ணயிக்கவில்லை. சில பாடங்களுக்கு, இந்த தகுதியை நிர்ணயித்திருந்தாலும், அதற்கு தகுதியான ஆட்கள் இல்லாதது பெரிய பிரச்னையாக இருக்கிறது. எனினும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க, ஜூன் இறுதி வரை கெடு விதித்துள்ளோம். இவ்வாறு திருவாசகம் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us