தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறந்த கல்லூரிகளில் 10 புதிய படிப்புகள்

சிறந்த கல்லூரிகளில் 10 புதிய படிப்புகள்

சிறந்த கல்லூரிகளில் 10 புதிய படிப்புகள்


UPDATED : மே 05, 2011 12:00 AM

ADDED : மே 05, 2011 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2011 12:00 AM ADDED : மே 05, 2011 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை பல்கலையின் கீழ் இயங்கும் சிறந்த கல்லூரிகளைத் தேர்வு செய்து அவற்றில் புதிய பாத்து படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்று சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.


இது குறித்து அவர் கூறுகையில், வரும் கல்வியாண்டில் எம்.எஸ்சி., - யோகா, எம்.ஏ., - நிதி பொருளாதாரம், எம்.ஏ., - பொது நிர்வாகம் உள்ளிட்ட 10 முதுகலை படிப்புகளும், இரண்டு எம்.பில்., படிப்புகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.


மேலும், பி.காம்., - ஹானர்ஸ், பி.ஏ., - ஹானர்ஸ், பி.எஸ்சி., - ஹானர்ஸ் (நான்கு ஆண்டு) படிப்புகளும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதை, பரீட்சார்த்த அடிப்படையில், 10 சிறந்த கல்லூரிகளில் அமல்படுத்த இருப்பதாகவும், இதற்கு, கல்லூரி நிர்வாகங்கள், இம்மாத இறுதிக்குள் சென்னை பல்கலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் துணைவேந்தர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us