தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுவை அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை: 3ம் கட்ட கலந்தாய்வு 26ல் துவக்கம்

புதுவை அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை: 3ம் கட்ட கலந்தாய்வு 26ல் துவக்கம்

புதுவை அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை: 3ம் கட்ட கலந்தாய்வு 26ல் துவக்கம்


UPDATED : ஆக 26, 2013 12:00 AM

ADDED : ஆக 26, 2013 02:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2013 12:00 AM ADDED : ஆக 26, 2013 02:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான 3ம் கட்ட கலந்தாய்வு, 26ம் தேதி துவங்குகிறது.

புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 1 சேர்க்கைக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மீதமுள்ள இடங்களை நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பிளஸ் 1 வகுப்பில் சேராத மாணவர்கள், மதிப்பெண் அடிப்படையில், கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கலந்தாய்வில் நேரடியாக கலந்து கொண்டு இடம் பெற்றுக் கொள்ளலாம்.

வரும் 26ம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்கும் கலந்தாய்வில், 300 முதல் 499 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களும், மதியம் 2:00 மணிக்கு, 201 முதல் 299 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 27ம் தேதி காலை 9:30 மணிக்கு 175 முதல் 200 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்களும், அன்று மதியம் 2:00 மணிக்கு புதுச்சேரி மாநில குடியுரிமை இல்லாத மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கலந்தாய்விற்கு, மாணவர்கள் அசல் மற்றும் அவற்றின் நகல் சான்றிதழ் மற்றும் பெற்றோருடன் வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us