ஸ்டார்ட் அப் - 100 மிஷன் ஐ.ஐ.டி.,யின் ஐ.ஓ.டி., சிப் அறிமுகம்
ஸ்டார்ட் அப் - 100 மிஷன் ஐ.ஐ.டி.,யின் ஐ.ஓ.டி., சிப் அறிமுகம்
UPDATED : மே 13, 2024 12:00 AM
ADDED : மே 13, 2024 09:46 AM

சென்னை:
ஐ.ஐ.டி., மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் படித்த, 34 பேர் குழு, நாட்டில் முதல் முறையாக வணிக ரீதியாக உயர் செயல்திறன் கொண்ட ஐ.ஓ.டி., என்ற சிப் வடிவமைத்து உள்ளது என சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறினார்.
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியில், ஸ்டார்ட் அப் நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாக பாதுகாப்பான, ஐ.ஓ.டி., என்ற 'சிப்'பை வடிவமைத்தது. இதன் அறிமுக விழா, ஐ.ஐ.டி.எம். ஸ்டார்ட் அப் -100 மிஷன் என்ற தலைப்பில், நேற்று, சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்தது.
ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, இத்தட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியதாவது:
இந்தியா வல்லரசு நாடாக வேலைவாய்ப்பு மிக முக்கியம். தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர்.
ஐ.ஐ.டி., மாணவ - மாணவியரும் நவீன கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் பயன்படுத்தும் சிப், வெளிநாடுகளில் வடிவமைத்து, தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது.
ஐ.ஐ.டி., மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் படித்த 34 பேர் குழு, நாட்டில் முதல் முறையாக, வணிக ரீதியாக உயர் செயல்திறன் கொண்ட, ஐ.ஓ.டி., என்ற சிப் வடிவமைத்து உள்ளது.
இதில், ஐ.ஐ.டி.,யின் பங்கும் மிக முக்கியம். கண்ணுக்கு புலப்படாத இந்த சிப்பை, ஸ்டார்ட் வாட்ச், பில் மிஷின், ட்ரோன், ஸ்பீக்கர் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தி, தகவல் தொழில்நுட்ப செயல்திறனை வேகப்படுத்த முடியும்.
இப்போது, இங்கு வடிவமைத்து வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கும் நிலை உருவாகி வருகிறது. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, சிப் தயாரிப்பதால் பல வகைகளில் பயன்படும்.
வ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், ஐ.ஓ.டி., சிப் வடிவமைத்த இளைஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.