தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டப்பணிகளுக்கு ரூ.106 கோடி

அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டப்பணிகளுக்கு ரூ.106 கோடி

அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டப்பணிகளுக்கு ரூ.106 கோடி


UPDATED : செப் 12, 2011 12:00 AM

ADDED : செப் 12, 2011 12:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2011 12:00 AM ADDED : செப் 12, 2011 12:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்காக நடப்புக் கல்வியாண்டில் 106 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (எஸ்.எஸ்.ஏ) சார்பில் பள்ளிக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், பயிற்சிகளுக்காகவும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்படி 2011-2012ல் கோவை மாவட்டத்துக்கு 106 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ஏ., மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைவாணி கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில், எஸ்.எஸ்.ஏ., சார்பில் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கப்படுவதோடு, ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள முகாம்களுக்கு 7.6 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

2,645 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளி மானியமாக 142 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2011-2012ல் 245 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், 314 பெண்கள் கழிப்பறை, 157 கழிப்பறை, 65 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி, 15,725 மீட்டர் சுற்றுச்சுவர், 55 தலைமை ஆசிரியர் அறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 3,257 பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டு, இணைப்பு மையங்கள், உண்டு உறைவிட மையங்கள், சிறப்பு உண்டு உறைவிட மையங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, கலைவாணி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us