பள்ளிப் பேருந்து விபத்து: ராஜஸ்தானில் 11 மாணவர்கள் பலி
பள்ளிப் பேருந்து விபத்து: ராஜஸ்தானில் 11 மாணவர்கள் பலி
UPDATED : ஜூலை 31, 2013 12:00 AM
ADDED : ஜூலை 31, 2013 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜஸ்தான் மாநிலம், ஹனுமங்கர்க் மாவட்டத்தில் நேற்று காலை, மாணவர்களை அழைத்து சென்ற பள்ளி பேருந்து ஒன்று, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்த 40 மாணவர்களில், ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின் பலியாயினர்.
இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தலைமறைவாகியுள்ள பேருந்து ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.