தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.எம் - அகமதாபாத் 11வது இடம்பிடித்து சாதனை

ஐ.ஐ.எம் - அகமதாபாத் 11வது இடம்பிடித்து சாதனை

ஐ.ஐ.எம் - அகமதாபாத் 11வது இடம்பிடித்து சாதனை


UPDATED : பிப் 04, 2011 12:00 AM

ADDED : பிப் 04, 2011 02:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2011 12:00 AM ADDED : பிப் 04, 2011 02:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகின் 100 சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சம்பந்தமாக, த பைனான்சியல் டைம்ஸ் மேற்கொண்ட ஆய்வு மற்றும் தரநிலையின் அடிப்படையில் ஐ.ஐ.எம்-அகமதாபாத் 11வது இடத்தை பிடித்துள்ளது. எக்சிகியூடிவ்களுக்காக மேலாண்மைத் துறையில் முதுநிலைப் படிப்பு(பி.ஜி.பி.எக்ஸ்), பணி அனுபவம் உள்ள எக்சிகியூடிவ்களுக்காக ஒரு வருட முழுநேர எம்.பி.ஏ. படிப்பு ஆகியவை, இந்த கல்வி நிறுவனத்திற்கு இத்தகைய உலகப்புகழைப் பெற்று தந்துள்ளன.


இங்கே படித்து வெளியேறும் மாணவர் பெறும் சம்பளமானது, ஹாவர்டு பிசினஸ் ஸ்கூல் மற்றும் லண்டன் பிசினஸ் ஸ்கூல் ஆகியவற்றின் மாணவர்கள் பெறும் சம்பளத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. புத்திசாலியான, ஆர்வமுள்ள மற்றும் லட்சிய வெறியுள்ள எக்சிகியூடிவ்களை உருவாக்கி, அவர்களை உலகளவில் இயங்க செய்வதற்காக கடந்த 2005ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் பி.ஜி.பி.எக்ஸ். படிப்பு. வேலைவாய்ப்பை பெறுவதில் இந்த படிப்பானது 14வது இடத்தில் பட்டியலிடப்படுகிறது.


மேலும் ஐ.ஐ.எம்-அகமதாபாத்தில் படித்த பழைய மாணவர்கள், தங்களின் நிறுவன பணிக்கு ஐ.ஐ.எம்-அகமதாபாத் மாணவர்களையே விரும்பி எடுக்கின்றனர். மேலும் பழைய மாணவர் பரிந்துரை விஷயத்தில் இந்த கல்வி நிறுவனம் 10வது இடத்தை பெறுகிறது. மேலும் அந்த பட்டியலில், லண்டன் பிசினஸ் ஸ்கூல், வார்டன் ஸ்கூல் ஆப் த யுனிவர்சிடி ஆப் பென்சில்வேனியா, ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் போன்றவை முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us