sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டில்லி கோர்ட் உத்தரவை அடுத்து 14 மாணவர் தலைவர்கள் விடுதலை

டில்லி கோர்ட் உத்தரவை அடுத்து 14 மாணவர் தலைவர்கள் விடுதலை

டில்லி கோர்ட் உத்தரவை அடுத்து 14 மாணவர் தலைவர்கள் விடுதலை


UPDATED : மார் 03, 2026 11:23 AM

ADDED : மார் 03, 2026 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 03, 2026 11:23 AM ADDED : மார் 03, 2026 11:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட, 14 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நேற்று அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் .

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பேரவையில் தலைவர் அதிதி மிஸ்ரா, துணை தலைவர் கோபிகா கே.பாபு, இணை செயலர் டேனிஷ் அலி, முன்னாள் டில்லி பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் நிதிஷ்குமார், அய்சா எனும் மாணவர் அமைப்பின் அனைத்திந்திய தலைவர் நேகா உள்ளிட்டோர் நேற்று விடுவிக்கப்பட்டதில் முக்கியமானவர்கள்.

டில்லி பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட்டின் உத்தரவை எதிர்த்து, பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்திய மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட, 14 பேர் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம், 26ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களின் ஜாமின் மனுக்களை பரிசீலனை செய்த டில்லி கோர்ட், கடந்த ஞாயிறு அன்று, அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது. அதற்கான உத்தரவில்,'போராட்டம் நடத்தியதற்காக மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.

அவர்களுக்கு இந்த வளாகத்தை தாண்டியும் பல பணிகள் இருப்பதால், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' என கூறியது. அதையடுத்து, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட, 14 பேர் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us