தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ சமச்சீர் கல்விக்கு மாறிய 19 மாணவர்கள் தேர்ச்சி

சமச்சீர் கல்விக்கு மாறிய 19 மாணவர்கள் தேர்ச்சி

சமச்சீர் கல்விக்கு மாறிய 19 மாணவர்கள் தேர்ச்சி


UPDATED : மே 17, 2025 12:00 AM

ADDED : மே 17, 2025 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2025 12:00 AM ADDED : மே 17, 2025 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுவிக்காடு பிரைம் என்ற தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 16 மாணவர்கள், மூன்று மாணவியர் என, 19 பேர் பத்தாம் வகுப்பு படித்தனர். பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாததால், இம்மாணவர்கள் தேர்வெழுத ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை.

தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முயற்சியில், இந்த மாணவர்கள், தஞ்சை அரசு மாதிரி பள்ளியில் சேர்க்கப்பட்டு, மாநில பாடத்திட்டத்தில் சிறப்பு பயிற்சி பெற்றனர். ஒரு மாதம் மட்டுமே, மாநில பாடத்திட்டத்தில் படித்த இம்மாணவர்கள் அனைவரும், தற்போதைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர் சதீஷ்குமார் கூறுகையில், மாநில பாடத்திட்டத்தில், கற்றலில் ஆரம்பத்தில் மாணவர்களிடம் தடுமாற்றம் இருந்தது. ஆனால், ஒரு மாதத்தில் அனைவரும் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us