தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மண்டல விளையாட்டுத்துறை இயக்குனரகம் சார்பில் 2 நாள் தடகளப் போட்டிகள்

மண்டல விளையாட்டுத்துறை இயக்குனரகம் சார்பில் 2 நாள் தடகளப் போட்டிகள்

மண்டல விளையாட்டுத்துறை இயக்குனரகம் சார்பில் 2 நாள் தடகளப் போட்டிகள்


UPDATED : ஆக 09, 2014 12:00 AM

ADDED : ஆக 09, 2014 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2014 12:00 AM ADDED : ஆக 09, 2014 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, வ.உ.சி., பூங்காவில், தமிழ்நாடு மண்டல விளையாட்டுத்துறை இயக்குனரகம் சார்பில், இரண்டு நாள் தடகளப் போட்டிகள் துவங்கின.

முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து, ஐ.சி.எஸ்.இ., மற்றும் ஐ.எஸ்.சி., அங்கீகாரம் பெற்ற, 36 பள்ளிகளில் இருந்து, 650 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

முன்னதாக, தொடர் ஜோதி, சென்னிமலை, ஈங்கூரில் இருந்து வ.உ.சி., பூங்கா மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டது. வ.உ.சி., பூங்காவில் நடக்கும் தடகள போட்டியில், இளையோர் பிரிவில், ஆண்கள், பெண்கள், மூத்தோர் பிரிவில் ஆண்கள், பெண்கள் என பிரிக்கப்பட்டு, 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல் உள்ளிட்ட 54 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.

போட்டிகளில், அதிக புள்ளிகளை பெற்ற, தனி விளையாட்டு வீரர்களுக்கு, கேடயமும், பரிசும் வழங்கப்படும். போட்டிகளை நேரடியாக பார்க்கும் வகையில், எல்.இ.டி., திரை மற்றும் ஹெச்.டி., வீடியோக்கள் மற்றும் புகைப்பட கருவிகளோடு, விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இறுதிப்போட்டியிலும், முதல், இரண்டு இடங்கள் பெறும், மாணவ, மாணவியர், அகில இந்திய அளவில் நடக்கும் போட்டிக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரி ஐ.சி.எஸ்.இ., மற்றும் ஐ.எஸ்.சி., பள்ளிகள் சார்பில் பங்கேற்க உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us