கிராம பள்ளிகளுக்கு ‘மினரல் வாட்டர்’: ரூ.200 கோடி ஒதுக்கீடு
கிராம பள்ளிகளுக்கு ‘மினரல் வாட்டர்’: ரூ.200 கோடி ஒதுக்கீடு
UPDATED : நவ 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
குடிநீரில் பரவும் நோய்கள், புளோரைடு வேதிப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கிராமப்புற பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர்) வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
‘ஜல்மணி’ என்ற ‘மெகா’ திட்டத்தின் மூலம் பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தப்படவுள்ளன. ஒரு பள்ளிக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படும்.
200 கோடி ரூபாய் ஒதுக்கீடு: 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, இந்நிதி ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் பள்ளிகளில் கருவி பொருத்தப்படவுள்ளது. சிவகங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் குழந்தைகள் தினத்தன்று (நவ. 14) துவக்கப்படவுள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக 315 பள்ளிகளில் கருவி பொருத்தப்படும். சிவகங்கை மாவட்டத்தில் 127 பள்ளிகள் பயனடையவுள்ளன.
குடிநீர் வாரிய செயற்பொறியாளர் சி.வி.ராஜன் கூறுகையில், ‘குடிநீர் வாரியம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடிநீரை சுத்திகரிக்க ஆறு தொழில்நுட்பங்களை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அல்ட்ரா பில்ட்ரேஷன், அயன் எக்ஸ்சேஞ்ச், எலக்ட்ரோ டயாலிசிஸ், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ், மெம்பரின் பில்ட்ரேஷன், மைக்ரோ பயாலஜிகல் டிஸ்இன்பெக்சன் முறைகளில் குடிநீர் வழங்கப்படும். பள்ளிகளில் குடிநீரின் தன்மையை பரிசோதனை செய்து வருகிறோம்’ என்றார்.
