தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச செஸ் போட்டி: ஜூலை 25ல் துவக்கம்

சர்வதேச செஸ் போட்டி: ஜூலை 25ல் துவக்கம்

சர்வதேச செஸ் போட்டி: ஜூலை 25ல் துவக்கம்


UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM

ADDED : ஜூலை 22, 2014 12:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM ADDED : ஜூலை 22, 2014 12:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் ஜூலை 25 முதல் 30 வரை சர்வதேச செஸ் போட்டி நடக்க உள்ளது. இதில் 450 வீரர்கள், ஒரு கிரான் மாஸ்டர் மற்றும் 17 சர்வதேச மாஸ்டர்கள் கலந்து கொள்வதாக அகில இந்திய பன்னாட்டு செஸ் கழக தலைவர் அனந்தராமன் கூறினார்.

விருதுநகரில் அவர் கூறியதாவது: சர்வதேச செஸ் போட்டி பல்வேறு நிலைகளில் விருதுநகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இது வரை 250 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் 150 பேர் வரை பங்கேற்பர். இதில் பங்குபெறும் 162 வீரர்கள் உலக செஸ் தரப்பட்டியலில் இடம் பெற்றவர்கள். முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

விருதுநகர் செஸ் கிளப் தலைவர் சங்கர பாண்டியன், செயலாளர் சசிதரன், பொருளாளர் மாரியப்பன் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us