தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவப் படிப்புகள்: கலந்தாய்வு 30ம் தேதி துவக்கம்

கால்நடை மருத்துவப் படிப்புகள்: கலந்தாய்வு 30ம் தேதி துவக்கம்

கால்நடை மருத்துவப் படிப்புகள்: கலந்தாய்வு 30ம் தேதி துவக்கம்


UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM

ADDED : ஜூலை 21, 2014 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM ADDED : ஜூலை 21, 2014 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு - பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.எச்., பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் 30ம் தேதி துவங்குகிறது.

இதில் பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.எச். பட்டப்படிப்புக்கு சிறப்பு இட ஒதுக்கீடுகள் மற்றும் தொழில் பிரிவு மாணவர்களுக்கு 30ம் தேதியும்; பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 31ம் தேதியும்; பி.டெக். உணவு தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்ப படிப்பிற்கு ஆக. 1ம் தேதியும் கலந்தாய்வு நடக்கிறது.

பல்கலையின் இணையதளமான www.tanuvas.ac.inல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை எனில் உரிய காலத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த, குறிப்பிட்ட கட்-ஆப் மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேல் பெற்ற தகுதியான மாணவர்கள், தக்க சான்றிதழ்களுடன் நேரடியாக கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கலந்தாய்விற்கு மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணிநேரம் முன்னதாக அரங்கினுள் இருக்க வேண்டும். அழைப்பின் போது இல்லாத மாணவர்கள் தங்கள் இடத்தை இழக்க நேரிடும். கூடுதல் விவரங்கள் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us