UPDATED : மார் 16, 2016 12:00 AM
ADDED : மார் 16, 2016 11:16 AM
அ நிறம் | அளவு
தேனி
: மாவட்டத்தில்
நேற்று நடந்த 10ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில்
மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 335 பேர் ஆப்சென்ட் ஆயினர்.
பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 30, உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 27 என மொத்தம் 57 மையங்களில் நடந்த தமிழ் முதல் தாள் தேர்வை 17,791 மாணவர்கள் எழுதினர். 257 பேர் ஆப்சென்ட் ஆயினர். தனித்தேர்வர்களுக்கு பெரியகுளம் 2, உத்தமபாளையம் 3 என மொத்தம் 5 மையங்களில் தேர்வு நடந்தது.
விண்ணப்பித்திருந்த 725 பேரில் 647 பேர் மட்டுமே எழுதினர். 78 பேர் ஆப்சென்ட் ஆகினர். மாணவர்கள் மற்றும் தனித்தேர்வகள் என மொத்தம் 335 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை கண்காணிப்பு அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள், பறக்கும்படையினர் கண்காணித்தனர்.
