தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணை மருத்துவ படிப்புகளில் புதிதாக 3,878 இடங்கள் சேர்ப்பு

துணை மருத்துவ படிப்புகளில் புதிதாக 3,878 இடங்கள் சேர்ப்பு

துணை மருத்துவ படிப்புகளில் புதிதாக 3,878 இடங்கள் சேர்ப்பு


UPDATED : அக் 26, 2026 06:59 PM

ADDED : அக் 26, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 06:59 PM ADDED : அக் 26, 2026 07:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
துணை மருத்துவ படிப்புகளில், புதிதாக, 3,878 இடங்கள் உருவாக்கப்பட்டு, மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 2,500க்கும் மேற்பட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே, புதிய செவிலியர் படிப்பு மற்றும் துணை மருத்துவ படிப்புகள் உருவாக்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.

அதன்படி, நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலுார், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் கோவை இ.எஸ்.எஸ்., மருத்துவமனை ஆகிய, ஏழு இடங்களில், புதிதாக மருத்துவ கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அங்கு, 660 பி.எஸ்.சி., நர்சிங் இடங்கள்; ஏற்கனவே உள்ள அரசு செவிலியர் கல்லுாரிகளில், 440 பி.எஸ்.சி., நர்சிங் இடங்கள் என, 1,100 பி.எஸ்.சி., நர்சிங் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

துணை மருத்துவ படிப்புகளில், ஏற்கனவே உள்ள 12 படிப்புகளில், 1,646 இடங்கள்; புதிதாக, ஒன்பது படிப்புகளில், 1,132 இடங்கள் என, ஒட்டுமொத்தமாக, 3,878 இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்த இடங்கள் தற்போது நடந்து வரும் மாணவர் சேர்க்கையில், மூன்றாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளதாக, மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

அறிவித்தோம், நிறைவற்றினோம்!

தமிழகத்தில், 2014க்கு பின், புதிய அரசு செவிலியர் கல்லுாரிகள் தொடங்கப்படாத நிலை நீடித்து வந்தது. சட்டசபையில் முதல்வர் அறிவித்ததும், உடனடியாக நிறைவேற்ற அரசாணை வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இந்த வாய்ப்பினை மாணவ, மாணவியர், நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களுடைய உயர்கல்வி பயணத்தில் சிறந்து விளங்க வேண்டும். அறிவித்தோம், நிறைவேற்றினோம். இது தான், அண்ணனின் அரசு.
- அருண்ராஜ், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us