தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவே ஆயுதம்... தன்னம்பிக்கையே வெற்றி: 'தினமலர்-பட்டம்' வினாடி வினா போட்டியில்

அறிவே ஆயுதம்... தன்னம்பிக்கையே வெற்றி: 'தினமலர்-பட்டம்' வினாடி வினா போட்டியில்

அறிவே ஆயுதம்... தன்னம்பிக்கையே வெற்றி: 'தினமலர்-பட்டம்' வினாடி வினா போட்டியில்


UPDATED : நவ 18, 2026 05:05 PM

ADDED : நவ 18, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 05:05 PM ADDED : நவ 18, 2026 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' எனும் மெகா வினாடி வினா போட்டி, பொள்ளாச்சி அருகே கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது.

மாணவர்களின் கற்றல் திறன், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், 2018ம் ஆண்டு முதல் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான போட்டி, பொள்ளாச்சி அருகே கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சத்யா ஏஜன்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் ஆகிய நிறுவனங்கள் பரிசு பொருட்களை வழங்கும் பங்களிப்பாளர்களாக இணைந்துள்ளன.

தகுதிச்சுற்றில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும், 205 மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் பதிலளித்தனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, எட்டு அணிகளாக பிரித்து இறுதி போட்டி நடந்தது.

மூன்று சுற்றுகளாக நடந்த இறுதி போட்டியில், 'டி' அணியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி சன்மிகா, பிளஸ் 1 மாணவி மிருதுளாதேவி ஆகியோர் முதலிடம் பெற்றனர். இறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள், சான்றிதழ்களை பள்ளி செயலாளர் உமா மகேஸ்வரி, பள்ளி முதல்வர் சண்முகம் ஆகியோர் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் சித்ரா ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்துள்ள, 160க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படும். அதில் இருந்து தேர்வாகும் எட்டு அணிகள் பங்கேற்கும் இறுதி போட்டி ஒரே இடத்தில் நடத்தப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

பயனுள்ள இதழ்


பள்ளி முதல்வர் சண்முகம் கூறியதாவது:


'பட்டம்' இதழ் மாணவர்களுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்த உறுதுணையாக உள்ளது. நம் நாட்டு செய்திகள் மட்டுமின்றி உலகச் செய்திகளும் தினமும் அறியும் வண்ணம் உள்ளது.

பாடத்துடன் தொடர்புடைய இலக்கணம் பகுதியும், மாணவர்களின் திறனை மேம்படுத்தும் புதிர் பகுதியும், அறிவியல் பகுதிகளும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

எங்களது பள்ளி மாணவர்கள், கணித புதிர் வினாக்களுக்கு சரியான பதில் அளித்து 'பட்டம்' இதழில் அவர்களின் பெயர் வெளியிட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். பட்டம் இதழ் மாணவர்களின் சிந்தனை தொகுப்பு என்பது பெருமைப்படக்கூடிய விஷயமாகும்.

இவ்வாறு, கூறினார்.

'பட்டம்' சிறந்த வழிகாட்டி


மாணவி சன்மிகா: 'பட்டம்' இதழ் மாணவர்களுக்கு பயன்தரக்கூடியதாகவும், அறிவை பெருக்கும் சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது. அன்றாட செய்திகளை அன்றே அறிய ஓர் வாய்ப்பாக உள்ளது. அறிவியல், கணிதம், விளையாட்டுத்துறை செய்திகள் நான் விரும்பி படிக்கும் பகுதியாகும். என் வாசிப்புத்திறனை மேம்படுத்த, 'பட்டம்' இதழ் மிகவும் உறுதுணையாக உள்ளது.

மாணவி மிருதுளா தேவி: 'பட்டம்' இதழ் என் வாசித்தல் திறனை மேம்படுத்தியுள்ளது. கற்றல் திறன், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. பாடத்தோடு தொடர்புடைய இலக்கணப்பகுதியும், புதிர் பகுதியும் எனக்கு மிகவும் பிடித்தமான பகுதியாகும். 'பட்டம்' இதழ் அனைத்து மாணவர்களும் விரும்பி படிக்கும் இதழாக உளளது. பொது அறிவு களஞ்சியமாகவும் உள்ளதால், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் கைகொடுக்கும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us